அநாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் - இந்த
1
காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்தரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார். - இந்த
2
கானக பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே. - இந்த
3
கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
உம் சமாதானத்தின் உடன்படிக்கைதனை
உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார். - இந்த
4
இப்புவி யாத்திரை கடந்திடவோம்
தூய தேவ தயவால்
கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினிலே
கிடக்கும் இளைப்பாறுதலே. - இந்த