அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 24

தோத்திர பாத்திரனே, தேவா

தோத்திர பாத்திரனே, தேவா,

தோத்திரம் துதியுமக்கே!

நேத்திரம் போல் முழு ராத்திரியும் காத்தாய்;

தோத்திரந் துதியுமக்கே!

1

சத்துரு பயங்களின்றி, - நல்ல

நித்திரை செய்ய எமை

பத்திரமாய்ச் சீராட்டி உறக்கியே

சுற்றிலும் கோட்டையானாய். - தோத்

2

விடிந்திருள் ஏகும் வரை - கண்ணின்

விழிகளை மூடாமல்

துடி தாய், தந்தை போல் படுமிசை எமது

துணை எனக் காத்தவனே. - தோத்

3

காரிருள் அகன்றிடவே, - நல்ல

கதிரோனி திகழ்ந்திடவே,

பாரிதைப் பறட்டி உருள்ச் செய்தே கண

பாங்கு சீராக்கி வைத்தாய். - தோத்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு