கிருபை தேவ கிருபை
வழி நடத்தும்...
அவர் கிருபை மாறாதே
காலை தோறும் புதியதே....
1
நாம் நீர்மூலமாகாதும்
தேவ கிருபை அல்லவோ
அவர் இரக்கம் முடிவில்லையே
தேவ கிருபை மாறாதே... - கிருபை
2
கர்த்தர் என் பங்கு என்று
என் ஆத்துமா சொல்லிடுமே
என் நம்பிக்கை வீண் போகாதே
தேவ கிருபையில் நிலைத்து நிற்கும்... - கிருபை
3
நம்பிக்கை என் பெலனே
நல்லவர் இயேசுதானே
என் இரட்சகர் இயேசுவல்லால்
மெய்த்தேவும் யாருமில்லையே... - கிருபை