1
சர்வலோகாதிபா நமஸ்காரம்!
சர்வ சிருஷ்டிகரே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்.
2
தீரு அவதாரா நமஸ்காரம்!
ஜெகத் தீரட்சகனே நமஸ்காரம்!
தரணியின் மனுபர் உயிர் அடைந்தோர்க்குத்
தருவினில் மாண்டோய் நமஸ்காரம்.
3
பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
பரம சற்குருவே, நமஸ்காரம்!
அருபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்.
4
முத்தாழினானே நமஸ்காரம்!
மூன்றிலொன்றோனே நமஸ்காரம்!
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா
நித்திய திரியேகா நமஸ்காரம்.