துதி கீதங்களால் புகழ்வேன்
உந்தன் நாம மகத்வங்களை
இயேசுவே இரட்சகர்
உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்.
1
தினந்தோறும் உம் தானங்களால்
நிறைத்திடுமே எங்களை நீர்
திரு உள்ளமது போல் எம்மை மாற்றிடுமே
கனிவோ பெங்களை உந்தன் காருண்யத்தால்.- துதி
2
அலைமோதும் இவ் வாழ்க்கையிலே
அனுகூலங்கள் மாறும்போது
வழி காட்டிடுமே துணை செய்திடுமே
கனிவோ படியார்களைக் காருண்யத்தால்.- துதி
3
வளம் நிறைந்த வாழ்வு தந்தார்
மகிமை நிறைந்த தாழ்மை தந்தார்
அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார்
ஆவி நிறைந்த அறிவு தந்தார்.- துதி
4
சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்
சத்தியம் நிறைந்த சபை தந்தார்
இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்
ஒளி நிறைந்த வழி திறந்தார்.- துதி