அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 43

நன்றியால் பாடிடுவோம்

நன்றியால் பாடிடுவோம்

நல்லவர் இயேசு நல்கிய எல்லா

நன்மைகளை நினைந்ததே.

1

செங்கடல்தனை நடுவாய்ப் பிரித்த

எங்கள் தேவனின் கரமே

தாங்கியதே இந்நாள் வரையும்

தயவாய் மா தயவாய்.- நன்றி

2

உயிர்ப்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை

உடன் சுதந்தராய் இருக்க

கிருபையின் மகாதானமது வருங்

காலங்களில் விளங்க.- நன்றி

3

ஜீவனைத் தியாகமாய் வைத்த பலர் கடும்

சேவையில் மரித்தார்

சேர்ந்து வந்து சேவை புரிந்து

சோர்ந்திடாது நிற்போம்.- நன்றி

4

மித்ருக்களான பலர் நன்றியிழந்தே

சத்ருக்களாயினாரே

சத்தியத்தைச் சார்ந்து தேவ

சித்தம் செய்திடுவோம்.- நன்றி

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு