அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 448

யுத்தம் செய்வோம், வாரும்

1

யுத்தம் செய்வோம், வாரும், கிறிஸ்து வீரரே!

ஏசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!

வெற்றி வேந்தராக முன்னே போகிறார்,

ஜெயக்கொடி ஏற்றி போர் நடத்துவார்.

யுத்தம் செய்வோம், வாரும் கிறிஸ்து வீரரே!

ஏசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!

2

கிறிஸ்து வீரர்கள், நீர் வெல்ல முயலும்

பின்னிடாமல் நின்று ஆரவாரியும்!

சாத்தான் கூட்டம் அந்த தொனிக்கதிரும்

நரகாஸ்திவாரம் அஞ்சி அசையும்! -யுத்தம்

3

கிறிஸ்து சபை வல்ல சேனை போன்றதாம்

கர்த்தர் சென்ற பாதை செல்கின்றோமே நாம்;

கிறிஸ்து தாசர் யாரும் ஓர் சரீரமே ;

விசுவாசம், அன்பு, நம்பிக்கை ஒன்றே. -யுத்தம்

4

க்ரீம் ராஜமேன்மை யாவும் சிதையும் ;

கிறிஸ்து சபைதானே என்றும் நிலைக்கும்;

நரகத்தின் வாசல் ஜெயம் கொள்ளாதே ;

என்ற திவ்ய வாக்கு வீணாய்ப் போகாதே. -யுத்தம்

5

பக்தரே ஒன்றாக கூட்டங் கூடுமேன்!

எங்களோடு சேர்ந்து ஆர்ப்பரியுமேன்!

விண்ணோர் மண்ணோர் கூட்டம் ஏசு ராயர்க்கே

கீர்த்தி, புகழ், மேன்மை என்றும் பாடுமே. -யுத்தம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு