அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 467

பகலோன் கதிர் போலுமே

1

பகலோன் கதிர் போலுமே

ஏசுவின் ராஜரீகமே ;

பூலோகத்தில் வியாபிக்கும்,

நீடூழி காலம் வர்த்திக்கும்.

2

பற்பல ஜாதி தேசத்தார்

அற்புத அன்பைப் போற்றுவார்.

பாலரும் இன்ப ஓசையாய்,

ஆராதிபார் சந்தோஷமாம்.

3

நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே

சிறஷ்ட பாக்கியம் தங்குமே ;

துன்புற்றோர் ஆறித் தேறுவார் ;

திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார்.

4

பூலோக மாந்தர் யாவரும்

வானோரின் சேனைத் திரளும்,

சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்,

நீர் வாழ்க, ராயனே! என்பார்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு