ஆண்டவர் பங்காகவே, தசம பாகம்
அன்பர்களே, தாரும் ; - அதால் வரும்
இன்பந்தனைப் பாரும்.
வான்பலனகிகளைத் திறந்தாகி
வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்
நான் தருவேன், பரிசோதியுங்களென்று
ராஜாதி ராஜ சம்பூரணர் சொல்வதால் -
ஆண்டவர்
1
வேதவாரராஜன் அருட்சிகரை மீட்டாளும்
விண்ணவர் கோமானே, - அந்த
மேதகத்தை நன்றி ஜெபகஞ் செய்து
விதித்தது தானே,
வேதனம், வியாபாரம், காலி, பறவையில்,
வேளாண்மை, கைத்தொழில், வேறுவழிகளில்,
ஊழியமாகும் எதிலும் அவர் பாகம்
உத்தமமாகப் பிரதிஷ்டை பண்ணியே.-
ஆண்டவர்
2
ஆலயங் கட்டு, அருச்சனை செய்ய,
அதற்குள்ளாகப் பேண, - தேவ
ஊழியரைத் தாங்கி உன்னத போதனை
ஓதும் நன்மை காண,
ஏழைகள், கைம்பெண்கள், ஆனாத பாலர்கள்,
ஏதுகரமற்ற ஊனர், பிணியாளர்,
சாலவறிவு நாகரீக மற்றவர்
தக்க துணை பெற்று துக்கமகன்றிட.-
ஆண்டவர்
3
நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள்
யாவும் நமக்கீந்து, - நல்ல
இம்மானுவே லென்மொரு மகனைத் தந்து
இவ்வாறு ரண்பு கூர்ந்து,
நன்மை புரிந்த பிதாவைக் கனம் பண்ண
நம்மையும் நம்முடன் யாவையு மீந்தாலும்
சம்மதமே யதிலும் தசம பாகம்
தாவென்று கேட்கிறார் ; மாவிந்தை யல்லவோ-
ஆண்டவர்