அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 501

எருசலேம் என் ஆலயம்

1

எருசலேம் என் ஆலயம்

ஆசித்த வீடே ;

நான் அதைக் கண்டு பாக்கியம்

அடைய வேண்டுமே.

2

பொற்றாணம் போட்ட வீதியிலே

எப்போதுலாவுவேன்?

பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்

எப்போது பணிவேன்?

3

எந்நாளும் கூட்டம் கூட்டமாய்

நிற்கும் அம்மோட்சத்தார்

கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்

ஓய்வின்றிப்பாடுவார்.

4

நானும் அங்குள்ள கூட்டத்தில்

சேர்ந்தும்மைக் காணவே

வாஞ்சித்து, லோக துன்பத்தில்

களிப்பேன், இயேசுவே.

5

எருசலேம் என் ஆலயம்

நான் உன்னில் வாழுவேன் ;

என் ஆவல், என் அடைக்கலம்

எப்போது சேருவேன்?

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு