காலை நேரம் இன்ப ஜெப தியானமே
கருணை பொற்பாதம் காத்திருப்பேன்
அதிகாலையில் அறிவை உணர்த்தி
அன்போடு இயேசு தினம் பேசுவார்.
1
எழுமான என் இயேசு முகம் தேடுவேன்
என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே
எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்
என்னை அழைத்தார் அவர் சேவைக்கே.- காலை
2
பன் தீமை நிறைந்த மொழிகள் உன்மேல்
பொய்யாய்ச் சொன்னாலும் களி கூருவாய்
இதுவே உன் பாக்கியம் என இயேசு சொன்னார்
இந்த மெய் வாக்குகிறை வேறுதே.- காலை
3
சிலுவை சுமந்தே அனுதினமே
சோராமல் என்னில் வா என்றாரே
அவரோடு பாடு சகித்தாளுவேனே
ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே.- காலை
4
பறந்து புறாபோல் சிறகடித்தே
பாடிச் சென்றோர் நாள் இளைப்பாறுவேன்
பரலோக வாசல் பரம சீயோனே
பூரித்து என்னை வரவேற்குமே.- காலை