ஒசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே
தாவீதின் குமாரனுக்கு உன்னதத்தில் ஒசன்னா.
1
முன்னும் பின்னும் சாலேம நகர்
சின்ன பாலர் பாடினார்
அன்று போல இன்று நாமும்
அன்பாய் துதிபாடுவோம். -ஒசன்னா
2
சின்னமறி மீதிலேறி
அன்பாய்ப் பவனி போனார்
இன்று என்னைத்தீவர்
வந்து அரசாளுவார். -ஒசன்னா
3
பாலர்களின் கீதம் கேட்டு
பாசமாக மகிழ்ந்தார்
ஜாலர் வீணையோடு பாடு
தாளம் முத்தி செய்குவோம். -ஒசன்னா
4
குருத்தோலை ஜாயிற்றில் நாம்
குருப்பாதம் பணிவோம்
கவி அருள் பெற்று - நாம்
திரியேகனை போற்றுவோம். -ஒசன்னா
5
பாவமதை போக்கவும்
இப்பாவியைக் கைத்தூக்கவும்
பாசமுள்ள ஏசு ராஜா
பவனியாக போகிறார். -ஒசன்னா