அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 518

எப்படிப் பாடுவேன் நானே

எப்படிப் பாடுவேன் நானே, ஏராளமாய்ப்

பாட்டுத்தானே

எப்படிப் பாடினும் ஆடினும்

அவர் அன்பை சொல்ல முடியாதப்பா.

1

பத்து இலட்சம் கின்னரங்கள் - போதா

பத்து இலட்சம் மத்தளங்கள் போதா

எப்படிப் பாடினும் ஆடினும்

அவர் அன்பை சொல்ல முடியாதப்பா. -எப்படி

2

ஆயிரம் நாவுகள் போதா

பதினாயிரம் நாவுகள் போதா

எப்படிப் பாடினும் ஆடினும்

அவர் அன்பை சொல்ல முடியாதப்பா. -எப்படி

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு