1
இயேசு எந்தன் நேசரே,
கண்டேன் வேத நூலிலே ;
பாலர் அவர் சொந்தத்தான்,
தாங்க அவர் வல்லோர்தான்.
இயேசு என் நேசர், இயேசு என் நேசர்,
இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிகே.
2
என்னை மீட்க மரித்தார்,
மோட்ச வாசல் திறந்தார்,
எந்தன் பாவம் நீக்குவார்,
பாலன் என்னை ரட்சிப்பார்.
3
பெலவீனம் நோவிலும்,
என்றும் என்னை நேசிக்கும்,
இயேசு தாங்கித் தேற்றுவார்,
பாதுகாக்க வருவார்.
4
எந்தன் மீட்பர் இயேசுவே
தங்குவார் என்னருகே
நேசனாய் நான் மரித்தால்,
மோட்சம் சேர்ப்பார் அன்பினால்.