அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 7

எந்நாளுமே துதிப்பாய்

எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே, நீ

எந்நாளுமே துதிப்பாய்!

இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த

எண்ணில்லா நன்மைகள் யாவுமறவாது. - எந்நாளு

1

பாவங்கள் எத்தனையோ, - நினையாதிருத்தாருள்

பாவங்கள் எத்தனையோ,

பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்

பாரினில் வைத்த மாதயவை நினைந்துது. - எந்நாளு

2

எத்தனையோ கிருபை, உன்னுயிர்க்குச் செய்தாரே,

எத்தனையோ கிருபை,

நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,

செத்திடாதபடி ஜீவனை மீட்டதால். - எந்நாளு

3

நன்மையாலுன் வாயை-நிறைத்தாரே, பூர்த்தியாய்

நன்மையாலுன் வாயை;

உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு

இன்னும் இளைமை போலாகவே செய்ததால். - எந்நாளு

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு