ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 169

தூபம் போல் என்

பல்லவி

தூபம் போல் என் ஜெபங்கள்

ஏற்றுக் கொள்ளும் ஐயா

மாலைபலிபோல் என் கைகளை

உயர்த்தினேன் ஐயா

உம்மை நோக்கி கதறுகிறேன்

விரைவாய் உதவி செய்யும்

சரணம் 1

என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்

நிலைதிற்க முடியாதையா

மன்னிப்புத் தருபவரே

உம்மைத்தான் தேடுகிறேன்

சரணம் 2

விடியலுக்காய் காத்திருக்கும்

காவலனைப் பார்க்கிலும்

என் நெஞ்சம் ஆவலுடன்

உமக்காய் ஏங்குதையா

சரணம் 3

என் வாய்க்கு காவல்வையும்

காத்துக் கொள்ளுமையா

தீயன எதையுமே - நான்

நாட விடாதேயும்

சரணம் 4

என் கண்கள் உம்மைத்தானே

நோக்கி இருக்கின்றன

அடைக்கலம் புகந்தேன் - நான்

அழிய விடாதேயும்

சரணம் 5

என் கண்ணீரை உம்தோற்பையிலே

சேர்த்து வைத்திருக்கிறீர்

அலைச்சல் அனைத்தையும்

அறிந்து இருக்கிறீர்

சரணம் 6

இடர் (தடை)களெல்லாம் நீங்கும்வரை

புகலிடம் நீர்தானையா

எனக்காய் யாவையுமே

செய்து முடிப்பவரே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு