ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 318

கறைகள் நீங்கிட

பல்லவி

கறைகள் நீங்கிட

கறைகள் நீங்கிட கைகள் கழுவி

கர்த்தரைத் துதிக்கின்றேன் - என்

பலிபீடத்தை சுற்றிச் சுற்றி நான் வலம் வருகின்றேன்

சரணம் 1

கர்த்தாவே உம் பேரன்பு

எப்போதும் என் கண் முன்னே

வார்த்தையின் வெளிச்சத்தில்

வாழ அர்ப்பணித்தேன்

ஆராதனை ஆராதனை

ஆயுள் எல்லாம் ஆராதனை

அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்

அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்

சரணம் 1

அறுவடையின் எஜமானனே

அரணான அடைக்கலமே

அல்பாவும் ஒமேகாவும், தொடக்கமும் முடிவும் நீரே

சரணம் 2

இரக்கங்களின் தகப்பனே இளவயதின் வழிகாட்டியே

ஜீவிக்கின்ற மெய்தேவனே ஜீவனின் அதிபதியே

சரணம் 3

நித்தியானந்த சக்ராதிபதி நீர் ஒருவரே மாவேந்தர்

அரசர்க்கெல்லாம் அரசர் நீர் பேரின்பக் கடவுள் நீரே

சரணம் 4

மகா மகா நீதிபரர் மகத்துவங்கள் நிறைந்தவர்

மீட்பளிக்கும் வல்லமையே சாவாமை உள்ளவரே

சரணம் 5

எல்லாருக்கும் நீதிபதி சர்வத்தையும் உருவாக்கினீர்

சகல கிருபையும் நிறைந்தவர் சத்தியமானவரே

சரணம் 6

உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தர் நன்மைகளின் பிறப்பிடமே

யோனாவிலும் பெரியவரே, பிரதான மேய்ப்பர் நீரே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு