ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 48

இயேசுவின் பின்னால் நான்

பல்லவி

இயேசுவின் பின்னால் நான் செல்வேன்

திரும்பி பார்க்கை மாட்டேன்

சிலுவையே முன்னால்

உலகமே பின்னால்

இயேசு சிந்திய இரத்தத்தினாலே

என்றும் விடுதலையே

சரணம் 1

உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று

எல்லாம் உதவி விடடேன்

உடல் பொருள் ஆவி உடைமைகள் யாவும்

ஒப்புக் கொடுத்து விட்டேன்

நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு

என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்

எப்போதும் துதித்திடுவேன்

சரணம் 2

வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்

எதுவும் பிரிக்காது

வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்

முற்றிலும் ஜெயம் பெறுவேன்

நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ

வாழ்வோ சாவோ வல்ல தூதரோ

பிரிக்கவே முடியாது

சரணம் 3

அகிலமெங்கிலும் ஆண்டவன் இயேசு

ஆட்சி செய்திடணும்

ஆவியில் நிறைந்து சத்தியம் பேசும்

சுபைகள் பெருகிடணும்

என் சொந்த தேசம் இயேசுவுக்கே

இயேசுதான் வழி என்கிற முழக்கம்

எங்கும் கேட்கணுமே

சரணம் 4

பழையன கடந்தன் புதியன புகுந்தன

பரலோக குடிமகன் நான்

மறுரூபமாகி மணவாளன் இயேசுவை

முகமுகமாய் காண்பேன்

இதயமெல்லாம் ஏங்குதையயா

இயேசுவே உந்தன் அன்பு நதியிலே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு