கிறிஸ்தவ பாடல்

ஆதியிலே வார்த்தையாகி ஆதிபன் பிறந்தாரே

Aathiyile vaarththaiyaagi aathiban piranthaare

ஆதியிலே வார்த்தையாகி ஆதிபன் பிறந்தாரே

ஆதாம் பாவம் போக்க வந்த

அற்புத பாலகனே

1. விண்ணிலே உதித்த விண்ஜோதியே

மண்ணிலே மலர்ந்த மாணிக்கமே

கண்ணே என் கண்மணியே

ஆரிரோ ஆராரிரோ

பொன்னே என் பொன்மணியே

ஆரிரோ ஆராரிரோ -2

2. தீர்க்கரின் வாக்கு நிறைவேறிட

தீர்க்கமாய் இயேசு வந்துதித்தார்

தித்திக்கும் தீங்கனியே

ஆரிரோ ஆராரிரோ

தீன தயாளனே

ஆரிரோ ஆராரிரோ – 2

3. என்னையும் உன்னையும் இரட்சிக்கவே

தன்னையே பலியாய் தந்தவரே

சாலேமின் ராஜாவே

ஆரிரோ ஆராரிரோ

சாரோனின் ரோஜாவே

ஆரிரோ ஆராரிரோ – 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு