கிறிஸ்தவ பாடல்

என் பாத்திரம் நிரப்பி நிரப்பிடுமே

En paaththiram nirappi nirappidume

என் பாத்திரம் நிரப்பி நிரப்பிடுமே

அபிஷேக தைலத்தாலே நிரப்பிடுமே

நிரப்பிடுமே நிரப்பிடுமே

அனந்த தைலத்தாலே நிரப்பிடுமே

அபிஷேக நதியே பொழிந்திடுமே

அக்கினி காற்றே வீசிடுமே

1. அந்நிய பாஷைகள் நாவில் தாருமே

உமக்காய் வாழ்ந்திட பெலன் தாருமே

சாத்தானின் கோட்டையை முறியடிக்க

சத்துவம் தந்து நடத்திடுமே

2. மேல் விட்டறையில் இறங்கினீரே

எங்கள் மத்தியில் இறங்கிடுமே

சீஷர்களை பயன்படுத்தினீரே

எங்களையும் பயன்படுத்திடுமே

3. உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கில்

உம் ஜனங்கள் உயிர்பெற செய்தீரே

எங்களின் உலர்ந்த வாழ்வினையே

உயிர்பெற்று எழ செய்திடுமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு