கிறிஸ்தவ பாடல்

கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்

karththar Yesuvil Veroondruvom

கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்

கன்மலை மீதே கட்டப்படுவோம்

விசுவாசத்தில் உறுதி கொள்வோம்

நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம் (2)

1. பாவம் இல்லாதொரு

வாழ்க்கையும் மாயம்

இல்லா மனத் தாழ்மையும்

சாந்தம், நீடிய பொறுமையும் (2)

இரக்கம், தயவைத் தரித்திட !

2. வேத வசனத்தால் நிறையவும்

தேவ சமாதானம் ஆளவும்

பேதங்கள் இன்றி வாழவும் (2)

பேரன்பில் வளர்ந்து பெருகிட !

3. திருவசனம் எங்கும் கூறவும்

திறப்பின் வாசலில் நிற்கவும்

இயேசுவின் நுகத்தை ஏற்கவும் (2)

வருகையில் மகிமை அடைந்திட !

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு