துதிப் பாடல்கள்

ஆபத்திலே உலகமே ஓடுதய்யா

Aabathilae Ulagamae Odudhayyaa

ஆபத்திலே உலகமே ஓடுதய்யா

சாபத்திலே அழிந்தே போகுதய்யா

வேத வசனம்தான் சொல்லி எச்சரிக்குது

தேவ கிருபைதான் அதைத் தாங்கி நிற்குது

தேசத்தில புயலும் மழையும்

வேகமாகவே எழும்புது

தேசத்தின் ஜனங்கள் எல்லாம்

கலங்கி கலங்கி தவிக்கிது

உலகமும் அழிவது நிச்சயமே

இயேசுவின் வருகையும் வந்திடுமே

தெளிவில்லாத ஜனங்கள் எல்லாம்

அழிவின் பாதையில் ஓடுது

துளி கூட பயமே இல்லாம

பாவத்தை பகட்டா செய்யுது

வேதமே எச்சரிப்பெ காட்டுதுங்க

வேகமா இயேசுவிடம் வந்துடுங்க

ஜனங்களை தப்பித்துக் காக்க

இயேசுவின் கரமும் அழைக்குது

அவரிடம் வந்த ஜனங்கள் விடுதலை பெற்று

மகிழுது இயேசுவயே நம்பி வந்துடுங்க

இயேசுவுக்கு இதயத்தை தந்திடுங்க

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு