துதிப் பாடல்கள்

ஆதியில் இருந்த உம் வார்த்தை

Aadhiyil Irundha Um Vaarthai

ஆதியில் இருந்த உம் வார்த்தை தானே

என் செவிகளில் கேட்கின்றதே

என் கண்ணாலே கண்ட உம் வார்த்தை தானே

என் சிந்தையைத் தொடுகின்றதே

ஒளியாக மாற உம் வழியாக மாற

எந்தன வாழ்வை உம்மிடம் தந்தேன் தந்தேன்

பிதா குமாரன் நீரே பரிசுத்த ஆவி நீரே

வாரும் வாரும் வாரும் என் மேலே

ஒன்றாய் இணைந்திருப்போம் உயர்த்திடுவோம்

சரித்திரம் படைத்திடுவோம் புது

சரித்திரம் படைத்திடுவோம்

ஆவியானவர் ஆவியில் நிறைந்து

திறப்பில் நின்றிடுவோம்

ஜீவனானவர் உம்மைப் போற்றி

பயணம் தொடர்ந்திடுவோம்

பயணம் தொடர்ந்திடுவோம்

மரணத்தை ஜெயித்தவர்

உயிரோடு எழுந்தவர்

தரிசனம் தருபவர் நீரே

ஆவி ஆத்மா சரீரமெல்லாம்

அக்கினியாக மாறிப் போகும் தேவனும் நீரே

பெலனும் நீரே நீரே நீர் தானே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு