துதிப் பாடல்கள்

ஆலோசனை கர்த்தரே

Aalosanai Kartharae

ஆலோசனை கர்த்தரே, அன்பான என் தெய்வமே... - 2

என் யோசனை வீணானது, நீர் யோசனை தாருமே... - 2

ஆலோசனை கர்த்தரே அன்பான என் தெய்வமே

என் யோசனைகளினால்

ஏமாற்றும் துன்பம் கண்டேன்... - 2

நீர் கூறும் யோசனை நலமானது!

சமாதானம் சந்தோஷமே... - 2

நான் நடந்த பாதையெல்லாம்

மாயையும் மதிகேடுமே... - 2

நீர்காட்டும் பாதை ஒளியானது!

ஜீவனின் வழியானது... - 2

என் வாயின் வார்த்தையெல்லாம்,

கசப்பான நீர் ஊற்று... - 2

நீர் சொன்ன வார்த்தை இனிதானது!

என்னை எப்போதும் வளமாக்குது... - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு