துதிப் பாடல்கள்

ஆனந்தமாக அலையலையாக

Aanandhamaaga Alaiyalaiyaaga

ஆனந்தமாக அலையலையாக ஐய்யா உம் சந்நிதியில் நான்

அநுதினம் நுழைவேன் அன்பினில் மகிழ்வேன் உம் அருகில்

ஒரு மனமாக ஒரு நினைவாக இருப்பேன் உம் அருகினிலே

இதைவிட வேறென்ன வேண்டுமோ எனக்கு வாழ்வினிலே

ஓவ்வொரு முறையும் விழித்திடும்போது

உம் முகம் பார்த்தே விழித்திடவேண்டும்

இதுதானே என் வாழ்வில் நான் வேண்டும் பாக்கியம்

காலையும் மாலையும் கணக்கில்லாமல்

கர்த்தரின் முன்னே காத்திட வேண்டும்

மெய்யாக இதுதானே ஐய்யா என் ஆசையும்

கண்மணிபோல் எனை காத்திடும் தேவனின்

கரமதில் நானும் அடங்கிருப்பேன்

என்னையும் ஒரு பொருட்டாக நினைத்திட

என்னதான் உமக்கு நான் கொடுத்தேன்

வழி தெரியாமல் வாழ்ந்திடும்போது

வலக்கரம் நீட்டி வரவழைத்தீரே

வந்தேனே உம்முன்னே என் இயேசு ராஜனே

உருத்தெரியாமல் சிதைந்திடும்போது

உருவகம் கொடுத்து உயிர்ப்பித்தீரே

உம் பாதம் அது போதும் எனையாளும் தேவனே

இது தெரியாமல் இதுவரை நானும்

இருட்டினில் மூழ்கிக் கிடந்தேனே

இரக்கமும் உருக்கமும் நிறைந்த தேவனின்

கிருபையினால் இன்று பிழைத்தேனே

தாயின் கருவினில் தோன்றினமுதலே

தாங்கி வந்தீரே ஏந்தி வந்தீரே

தள்ளாடும் வயதுவரைக்கும் தயை காட்டும் தகப்பனே

நோயும் நொடியும் அணுகிவிடாமல்

தீயும் தண்ணீரும் சூழ்ந்துவிடாமல்

கன்மலை வெடிப்பில் வைத்தென்னை காக்கும்

கனிவான தேவனே

யுத்தநாளில் என் தலையை மூடினீர்

இத்தனை அன்பா என் மீதில்

எத்தனை பெரிய பாக்கியமே-இந்த

அடிமைக்கு கிடைத்த சிலாக்கியமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு