ஆராதிப்போம் இந்த வேளையிலே ஆண்டவரே
வந்து இறங்கிடுமே
உயர்ந்திடுவோம் எங்கள் உள்ளம் மகிழ்ந்து உத்தமரே
எங்களுடன் பேசிடும் (ஆராதிப்போம்)
1. வல்லமையின் தேவா வந்திறங்கும்
உம் வல்லமையால் எங்களை நிரப்பிடும்
வார்த்தையான எங்கள் இயேசு தேவா
வரங்களை எங்களுக்கு தந்தருளும் (ஆராதிப்போம்)
2. அன்பான எங்கள் அற்புதரே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும்
ஆவியான எங்கள் வல்லவரே
அன்னிய பாஷை வரத்தை கொடுத்திடும் (ஆராதிப்போம்)
3. காத்திடும் கருணை நேசரே - காலமெல்லாம்
உம்மை துதித்திடுவோம்
காலங்களை கையில் வைத்தவரே
கருணை புரிந்து எங்களை இரட்சியும் (ஆராதிப்போம்)