துதிப் பாடல்கள்

ஆராதித்து துதித்திடுவோம் ஆர்ப்பரித்து

Aaraadhithu Thudhithiduvom Aarpparithu

ஆராதித்து துதித்திடுவோம்

ஆர்ப்பரித்து மகிழ்ந்திடுவோம்

அவர் நல்லவர் நல்லவர் நல்லவர்

சர்வ வல்லவர் வல்லவர் வல்லவர்

செங்கடலை பிளந்து வழி தந்தவர்

செழிப்பான தேசத்தில் கனி தந்தவர்

செட்டைகளின் நிழலில் நடத்தியவர்

செம்மையாய் நடத்தினாரே

அக்கினி சூலையில் விடுவித்தவர்

அந்தகார வல்லமையை முறித்திட்டவர்

அதிகாரம் தந்து உயர்த்திட்டவர்

அபிஷேகித்து உயர்த்தினாரே

நம்மை அபிஷேகித்து உயர்த்தினாரே

அனுதினம் அன்பினால் நடத்திட்டவர்

அனுதினம் ஜெயம் அதை கொடுத்திட்டவர்

அனுதினம் குறைவின்றி போஷித்தவர் நம்மையும்

போஷிப்பாரே அவர் நம்மையும் போஷிப்பாரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு