துதிப் பாடல்கள்

ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்

Aavalodu Kelungal Arulven

ஆவலோடு கேளுங்கள் அருள்வேன் என்றீரே

தாகத்தோடு தேடுங்கள் தருவேன் என்றீரே

வல்லமையளிக்கும் தேவா வல்லமை தாரும்

நல்ல ஆவியே இப்போ எம் உள்ளத்தில் வாரும்

நாயகன் வரவின் காலம் நண்ணிவிட்டதே

பேயதின் கொடூரமோ பெருகி விட்டதே

சோதனை அதிகமாக மோதுகின்றதே

பாதகப் பிசாசின் அம்பு பாய்ந்து செல்லுதே

அன்பு லோகமெங்குமே குறைந்துவிட்டதே

வம்பர் கூட்டமோ மிக வளர்ந்து விட்டதே

பக்தி விசுவாசமும் பறந்துவிட்டதே

சத்திய வசனவாஞ்சை சாலக்குன்றிற்றே

வாலிபர் கன்னிகைகளும் வல்லமைபெற

பாலியர் முதியோர்களும் பாடிப்போற்றிட

ஏசுநாமம் எங்குமே பரம்பிவாழ்ந்திட

நேசரின் சபைகளோங்கியே வளர்ந்திட

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு