துதிப் பாடல்கள்

ஆவியான தெய்வமே அசைவாட

Aaviyaana Theyvamae Asaivaada

ஆவியான தெய்வமே அசைவாட வேண்டுமே,

அடியார்கள் உள்ளங்களில்

அபிஷேகம் செய்து அனலாக்கும் எம்மை

ஆராதனைசெய்ய... - 2

அசைவாடும்... அசைவாடும்...

ஆவியான தெய்வமே அசைவாடும்... - 2

நதியோரம் நிற்க்கும் மரங்களைப்போலே

கனி தந்து நாம் வாழவே... - 2

எண்ணையால் நிறைந்து எரிகின்ற சுடர்போல

தினமும் நாம் ஒளிவீசவே... - 2 (ஆவியின்...)

இல்லங்களில் எம் உள்ளங்களில்

நீரே வாசம் செய்யும்... - 2

இதயத்தில் அன்பு நிறைவாகத் தந்து

எந்நாளும் ஆளுகை செய்யும்... - 2 (ஆவியின்...)

ஆவியின் ஏவுதலால் ஆலயம் வந்து

ஆராதனை செய்ய... - 2

ஆவியில் நிறைந்து அன்பரே உமக்கு

ஆவியின் பலி செலுத்த... - 2 (ஆவியின்...)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு