ஆவியானவர் எங்கள் அன்பு நிறைந்தவர்
உம்மைப் பாடியே நானும் வாழுவேன் - 2
எண்ணில்லா நன்மைகளை என் வாழ்வில் செய்தீரே
உம்மை நான் பாடுகிறேன் - 2
1.தேற்றரவாளனாய் வந்தீரையா
தேற்றிட வாருமையா - 2
ஊற்றுத்தண்ணீராக வந்தீரையா
தாகம் தீருமையா – 2
எண்ணில்லா நன்மைகளை என் வாழ்வில் செய்தீரே
உம்மை நான் பாடுகிறேன் - 2
2.மீட்பின் நாளுக்கென்று முத்திரையாக ஆனவரே
உம்மை நான் மறவேனையா - 2
மீட்பின் நாளுக்கென்று அச்சாரமாய் ஆனவரே
உம்மை நான் துதிக்கிறேனையா - 2
எண்ணில்லா நன்மைகளை என் வாழ்வில் செய்தீரே
உம்மை நான் பாடுகிறேன் - 2