ஆவியை பொழிந்தருளும் தேவா
எங்கள் ஆத்துமாவை அனல் மூட்ட வா வா - 2
நீரில்லாமல் எங்களுக்கு வாழ்வில்லை
உம் கிருபை இல்லாமல் வழியில்லை - 2
அருள்மாரி பொழியும் இந்த வேளையிலே
அபிஷேகத்தால் நிரப்பும் இந்த காலையிலே - 2
தேற்றரவாளன் நீரே வந்தால்
தேடுவீர் எங்களை அன்பால் - 2
தேடிவரும் யாவருக்கும் கிருபை
தேனாய் அல்லி தந்து காக்கும். - 2
பரிசுத்த ஆவியான தேவா
பாசமாய் வழிநடத்தும் ஐயா - 2
நாடிவரும் யாவருக்கும் நீரே
நல்லதை செய்திடுவீரே - 2
உள்ளத்தில் உம்மை ஏற்றுக்கொண்டால்
உன்ன தத்துக்கு அழைத்து செல்வீரே - 2