ஆவியின் வரங்கள் அளவில்லாமல் பொழிந்தருளும் தேவனே - 2
ஆவி ஆத்மா சரீரமும் புத்துயிர் அடைந்திட - 2
ஞானம் புத்தி அறிவையும் ஆலோசனையையும் - 2
உணர்வும் தேவ பயமும் உம் ஆவியால் அருளும் - 2
சத்துவமில்லாமையையும் சோர்பையும் நீக்கி - 2
உற்சாகத்தின் ஆவியால் எம்மைத் தாங்கி நடத்தும் -2
பெலவீனங்களில் உதவி செய்யும் ஆவியானவர் - 2
வாக்குக்கடங்காப் பெருமூச்சோடு நமக்காய் வேண்டுபவர் - 2
ஆவியின் சிந்தை ஜீவனும் சமாதானமுமாம் - 2
ஆவியின்படியே நடக்கிறவர்கள் ஆக்கினைத் தீர்ப்படையார் - 2
கிறிஸ்துவின் ஆவியுடையவர்களே கிறிஸ்துவுடையவர்கள் - 2
கிறிஸ்து இயேசுவின் சீடர்கள் கிறிஸ்தவர்கள் - 2
ஆவியின் அணைத்துவிடாமல் ஆவியிலே பிழைக்க - 2
ஆவியினாலே ஜெபம்பண்ணி உறுதியாய்த் தரித்திருப்போம் - 2