1. அதிகாலையில் உம்மை யாம் ஸ்தோத்திரித்துத் துதித்து
அன்புடன் பணிந்து மன்றாடுகிறோம் - தேவா
2. சென்ற இரவு முழுவதும் எம்மையே
க்ஷேமமுடன் காத்தீர் எம் தேவனே எம்மை
3. அதிகாலையில் உம்மைத் தேடுகிறவர்கள்
உம்மைக் கண்டடைய இரங்குகிறீர் - தேவா
4. கேளுங்கள் அப்பொழுது கொடுக்கப்படும்
தேடுங்கள் கண்டடைவீர் என்றீரே - தேவா
5. ஜெபத்தின் சத்தத்தைக் கேட்கும் எம் தேவனே 2
அதிகாலையில் எம் ஜெபம் கேட்பீரே - தேவா
6. உம்மைக் கூப்பிடுகிற யாவருக்கும் நீர்
நல்லவராகவே இருக்கிறீர் - மிக
7. நீதியின் சூரியனாம் இயேசுவே இரங்கி
எங்கள் மேலேயே உதித்தருளும் - தேவா
8. பரலோகத்தில் உம்மையல்லாமல் யார் உண்டு?
பூலோகத்திலும் நீரே எமக்குண்டு - தேவா
9. அன்பர் இயேசுவே அன்புடன் எம்மை
அல்லும் பகலும் காத்தருளும் - தேவா