அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
மன்னுயிர் காக்கும் இரட்சகர் இயேசு
என்னரும் அற்புதம் செய்தார்
அதிசயம் அதிசயம்
கானாவூர் திருமணம் வேளையின் போது
நீரை திராட்ச ரசமாய் மாற்றி - 2
விருந்தினர் அருந்த மகிமை செய்தார்
விந்தையை எண்ணிய மக்கள் வியந்தனர்
ஐந்து அப்பம் இரண்டு மீனை
ஐந்தாயிரம் பேருண்ணச் செய்தார் - 2
குருடர் செவிடர் வியாதி கண்டோர்
குறைகளை நீக்கியே அருளினை செய்தார்
மரித்தவர் எழுந்தார் மாட்சிமை கொண்டார்
மகிமை தேவன் கிருபையைக் கண்டார்
பரிசுத்தர் பாதை நாளும் எண்ணி
நாமும் செல்வோம் அவர் வழி நடந்து