துதிப் பாடல்கள்

ஐந்து காயங்கள் ஏற்றவரே

Aindhu Kaayangal Etravarae

ஐந்து காயங்கள் ஏற்றவரே

ஐயனே உம் பாதம் சரணடைந்தேன் - 2

1. சோர்ந்து போன நெரங்களிளெல்லாம்

சுமந்து கொண்டீரே… சூழ்ந்து கொண்டீரே

உணவில்லாமல் அலைந்த நேரங்களிலெல்லாம்

உணவாய் வந்தீரே உம்மைத் தந்தீரே - 2

2. நிந்தையால் நிறைந்த நேரங்களிலெல்லாம்

இறங்கி வந்தீரே, நெருப்பாய் நின்றீரே

ஒன்றும் இல்லாத நேரங்களிலெல்லாம்

தேடி வந்தீரே (துணையாய் நின்றீரே) உதவி செய்தீரே

3. காரிருள் நிறைந்த நேரங்களிலெல்லாம்

ஒளியாய் வந்தீரே உதவி செய்தீரே

மாராவில் நான் நடந்த நேரங்களிலெல்லாம்

அழைத்துச் சென்றீரே ஏலீமை தந்தீரே (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு