அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா
அல்லேலூயா ஆமேன் - 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் - 2
உம்மைத் தானே நம்பியுள்ளேன்
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எனக்குத் தலைவர் நீர்தானையா
எங்க எபிநேசர் நீர்தானையா
எங்க மணவாளன் நீர்தானையா
எங்க துணையாளர் நீர்தானையா
1.அதிசயங்கள் உன்னைக் காணச் செய்வேன்
என்று சொன்னவர் வாக்கு மாறார் - 2
அதிசயம் காண்போம் அற்புதம் காண்போம்
கர்த்தர் நம்மோடிருப்பதால் - 2
2.செங்கடல் பிளக்குமே எரிகோவும் தகருமே
கர்த்தர் நம்மோடிருந்தால் - 2
மன்னாவும் கிடைக்குமே யோர்தானும் பிரியுமே
கர்த்தர் நம்மோடிருப்பதால் - 2
3.எக்காளம் தொனிக்கையில் தூதர்கள் சூழ்ந்திட
நம் இயேசு வரப் போகிறார் - 2
மறுரூபமாவோம் மகிமையில் சேர்வோம்
அவரோடு வாழ்ந்திடுவோம் - 2