துதிப் பாடல்கள்

அல்லேலுயா ஆராதனை துதித்து

Alleluyaa Aaraadhanai Thudhithu

அல்லேலுயா ஆராதனை

அல்லேலுயா ஆராதனை

துதித்து பாடி இயேசுவை போற்றி

என்றும் ஆராதிப்பேன்

என்றும் ஆராதிப்பேன் – 2

சேனைகளின் கர்த்தர் நீரே

யாக்கோபின் வல்லவரே – 2

அடைக்கலமானவரே

அதிசயமானவரே

உமக்கே ஆராதனை – 2

– அல்லேலுயா

நன்மைகளின் ஊற்று நீரே

தீமைகள் வென்றவரே – 2

வல்லமையானவரே

மாட்சிமையுள்ளவரே

உமக்கே ஆராதனை – 2

வாக்குதத்தம் செய்தவரே

வாக்கினை காப்பவரே – 2

மேன்மையானவரே

மகிமையானவரே

உமக்கே ஆராதனை – 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு