அன்பே என் ஆண்டவரே
அருள்தரும் அருள் நாதா
உம்மை நான் பாடி துதிக்கின்றேன் -1
துதிப்பேனே துதிப்பேனே
துதித்து கொண்டு இருப்பேன் - 2
நல்லவர் வல்லவர் அதிசயமானவர்
ஆலோசனை கர்த்தர் நீரே
நொருங்குண்ட இருதயம் தேற்றுபவரே
தேவாதி தேவன் நீரே - 2
தாயும் தகப்பனும் மறந்திடலாம்
நீரோ என்னை மறப்பதில்லை - 2
உயிர் உள்ள நாளெல்லாம்
பாடிடுவேன் உம் நாமத்தை - 2
வியாதிகள் வருத்தம் யாவையும் தீர்க்கும்
ஏழை என் தெய்வம் நீரே
அருகதை இல்லாத என்னை தெரிந்தீரே
எனது ஆசை மேய்ப்பனே - 2
உறவும் என்னை மறந்திடலாம் - 2
நீரோ என்னை மறப்பதில்லை - 2
ஆபத்து காலத்தில் அனுகூலமான
ஆண்டவர் இயேசு நீரே
உம் மடியினில் சாய்வேன்
கவலைகள் மறப்பேன்
எனக்குள் வாழும் ஜீவனே - 2
உலகம் என்னை மறந்திடலாம்
நீரோ என்னை மறப்பதில்லை - 2
கவலைகள் கலக்கம் யாவையும் தீர்க்கும்
கருணை கடல் என்றும் நீரே
உம் கிருபையின் நிமித்தம்
என்னை வழி நடத்தும்
எனது இயேசு ராஜாவே - 2
நம்பினவர் என்னை மறந்திடலாம்
நீரோ என்னை மறப்பதில்லை - 2