துதிப் பாடல்கள்

அன்பே உம் அன்பினால்

Anbae Um Anbinaal

அன்பே பேரன்பே அன்பே உம் அன்பினால் வியக்கவைத்தீர்

ஆழம் அகலம் அறியாமல் மெலிந்தேனே நான்

மயங்கி போனேன் உம் மெய்காதலால்

இவ்வன்பின் அம்சம் வர்ணிக்க இயலுமோ

கடற்கரைதனில் கரைகின்ற அலை நுரை போல

என் குருதியில் கலந்திட்ட உயிர் அணுவே

வானம் பூமி ஒழிந்தாலும் நிலைக்கும் இந்த அன்பு

வார்த்தையாலே வாழ்வளிக்கும் வானவர் தூய அன்பு

இன்ப இசையே உம்மில் ஈரம் மிகுந்ததே

இன்னும் கிட்டி நான் சேரனுமே உம்மையே

குறையெல்லாம் நிறைவாக்கும் கிறிஸ்தேசுவின் அன்பு

கூப்பிடும் பக்தரை குணமாக்கும் அன்பு

இளங்கிலையே உலர்ந்த வேரில் துளிர்த்தீரே

உந்தன் நேச தழல் என்மேல் பரவட்டுமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு