அன்பில் மலர்ந்த என் ரோஜா
என்னில் கலந்த என் ராஜா
அன்பான என் இயேசு ராஜன்
அவரே என் மாறாத தேவன்
எனக்காக சிலுவை சுமந்தார்
எனக்காக ஜீவன் சுமந்தார்
அவர் தந்த ஜீவ இரத்தம்
என்னை துயரின்றி தாங்கிடும் தஞ்சம்
பாரம் சுமந்து நான் அலைந்தேன்
இளைப்பாறுதல் தந்தென்னை காத்தாய்
பாவமற என்னைக் கழுவி
தேவ ஆவியால் என்னை நிறைத்தார்
கவலை கண்ணீர் யாவும்
சிலுவையில் எனக்காக ஏற்றீர்
கழுகு போல் சுமந்தாய்
என் காலமெல்லாம் காப்பீர்