அப்பா அப்பா இயேசப்பா என் அல்லலையே மாற்றுங்க
தப்பா தினம் பேசுறேன் என் தவறை மன்னிங்க
1. கிணற்றில் இருக்கும் தவளைபோல் சத்தம் இடுகிறேன்
சத்துருவின் கைக்குள் சிக்கி சஞ்சலப்படுகிறேன் -அப்பா
2. கோபம் எனக்கு வந்தால் நான் குழம்பிவிடுகிறேன்
குற்றம் உள்ள வார்த்தைகளால் உம்மை சிலுவையில் அறைகின்றேன் .
3. பேச அறியாதவன் போல் பேசி விடுகிறேன்
என் பேச்சில் குறை உள்ளதால் மனம் வருந்துகிறேன்
4. நாவை அடக்குதல் நல்லது என்றீரே - என் நாவை
நல்ல வார்த்தைக்கு பயன்படுத்துவீரே