துதிப் பாடல்கள்

அப்பாவின் முகம் காண

Appaavin Mugam Kaana

அப்பாவின் முகம் காண வெகு நாள் ஆசை

எப்போது நான் கண்டு அகமகிழ்வேன்

உம் முகம் காணவே ஓடிவந்தேன் ஐயா

திருமுக தரிசனம் வேண்டும் ஐயா

1.சாரோனின் ரோஜாவாம் பள்ளத்தாக்கின்

லீலி மலருக்குள் என் நேசரோ

அவர் வெள்ளைப்போளப் பூச்செண்டல்லவா

மருதோன்றிப் பூங்கொத்து என் நேசரோ

2.என் நேசர் சத்தம் அதோ கேட்கின்றதே

மலைகள் மேல் குதித்து வருகின்றாரே

வெளி மான்களைப்போல் துள்ளி வருகின்றாரே

மரைக்குட்டி அழகைப் போல் என் நேசரோ

3.ஆயிரம் மரங்களுள் கிச்சிலி போல்

அரச குமாரருள் என் நேசரோ

வாயின் முத்தங்களால் என்னை முத்தம் செய்யும்

உம் அன்பிற்கீடாக எதுவுமுண்டோ

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு