துதிப் பாடல்கள்

அசைந்திடு அசைந்திடு உலகமே

Asaindhidu Asaindhidu Ulagamae

அசைந்திடு அசைந்திடு உலகமே அசைந்திடு

இயேசுவுக்காய் அசைந்திடு நீ

மகிழ்ந்திடு மகிழ்ந்திடு ஆவியில் மகிழ்ந்திடு

இயேசுவுக்காய் மகிழ்ந்திடு நீ

துன்பங்களை நீக்கி நம் துயரங்களை போக்கி

பயமெல்லாம் மாற்றி நம் கவலையெல்லாம் போக்கி

எனக்காக வந்தீரே என் வாழ்வை நீர் மாற்றி தந்தீரே

நேசீத்தீரே நேசீத்தீரே நேசீத்தீரே இயேசுவே

நேசீத்தீரே நேசீத்தீரே நேசீத்தீரே இயேசுவே

கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றுவார்

கண்ணீரைத் துடைக்கின்ற நேசராக வருவார்

கலங்காதே கலங்காதே திகையாதே - 2

வறுமையும் வெறுமையும் நீங்கியே போகும்

வேதனையும் சோதனையும் மாறியே போகும்

சோர்ந்திடாதே சோர்ந்திடாதே கலங்கிடாதே - 2

தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறும்

துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாய் மாறும்

ஜெயமுண்டு ஜெயமுண்டு வெற்றி நமக்கே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு