துதிப் பாடல்கள்

அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே

Asthibaarangalum Nirmoolamaagiradhae

அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே

நீதிமான் என்ன செய்திடுவான்-2

உம்மையே நாங்கள் நம்பி நிற்கிறோம்

நீதிபரரே தயவாய் இறங்கும்-2

கண்ணோக்கிப் பாரும் விடுதலை தாறும்

தாமதமின்றி இரட்சிப்பை அருளும் -2

1- தேசம் பாழாகி நாளாகிப் போனதே

அக்கிரமம் அணியாயம் தலைவிரித்து ஆடிடுதே-2

நீதியாய் வாசம் செய்யும் ஒரு கூட்ட ஜனங்களோ-2

உமது நாளுக்காக காத்திருக்குதே

உமது வருகைக்காக காத்திருக்குதே

2- உம்முடைய வேதத்தையும் உம்மையும் மறந்ததினால்

தீவினைகள் தேசத்தின்மேல் தீவிரமாய் வருகிறதே-2

விடுவிப்பார் யாருமின்றி நிற்கதியாய் நிற்கின்றோம்-2

விடுதலை நாயகனோ விடுதலை தாருமையா

ஜனங்களின் சிறையிருப்பை மாற்றிடுமையா

3- உமது பார்வைக்கு பொல்லாப்பு செய்பவர்கள்

எந்நாளும் சுகித்திருந்து வாழ்ந்திடக் கூடுமோ-2

விலையின்றி விற்க்கப்பட்டோம்

பணமின்றி மீட்டுக்கொள்ளும் -2

சிறுமையானவரின் கதறலைக் கேட்பவரே

எங்களுக்காய் எழுந்திருந்து வழக்காடிடுமே

4- தண்ணீரும் விறகும் கூட விலைக் கிரயமாய் வருகிறது

பாரஞ்சுமந்து எங்கள் கழுத்தெல்லாம் நோகிறது-2

அடிமைகள் ஆளுகிறார்கள் விடுவிப்பார் எவருமில்லை-2

உம்மையன்றி எங்களுக்கு வேறு ஒரு மீட்பரில்லை

5- நீர் கொடுத்த சுதந்திரத்தின் மேன்மையை உணராமல்

உம்மை விட்டு தூரமானோம்

அனைத்தையும் இழந்து போனோம்-2

இழந்திட்ட யாவையுமே திரும்பத் தாருமையா-2

இல்லாமை இருள் அகற்றி புது ஒளி ஏற்றுமையா

சீயோனின் சிறையிருப்பை மாற்றிட வாருமையா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு