அவரே என்னைத் தேற்றினார்
அவரே என்னை ஆற்றினார்
அவரே எந்தன் நம்பிக்கை அவரே - 2
அவரே (2) போதுமே - 2
1. நான் சோர்ந்து போன நேரத்தில்
பெலன் தந்தவர் அவரே
நான் வெட்கப்பட்ட இடத்தில்
தலை உயர்த்தியவரும் அவரே - 2
என்னை கைவிடா
காத்திட்ட அவரே போதுமே - 2
எனக்கு அவரே (2) போதுமே - 2
2. நான் கவலைப்பட்ட நேரத்தில்
என் கண்ணீர் துடைத்தவரே
நான் காயப்பட்ட நேரத்தில்
என் காயம் ஆற்றினவரே
என்னை ஆற்றித் தேற்றின
நீரே போதுமே - 2
எனக்கு அவரே (2) போதுமே - 2