அழகாக பொடிவ கட்டி அற்புதமா ரவிக்க போட்டு
பொடி நடையா போர புள்ள
பொறுத்திரு நானும் வாரேன்
பாட்டுக்கு பாட்டெடுப்பேன் தெம்மாங்கு நாம் படிப்பேன்
எம்பாட்ட நின்னு கேளு ஏலேலங்குயிலே
உன்னத்தான தேடி வந்தேன் பொன்னான மயிலே
இது கடவுள் தந்த பாட்டு இந்த பாட் நீயும் கேட்டு
உன் மனச தெறந்து காட்டு இனி பண்ணாதே நீ லேட்டு
இனி காலம் இல்லே நேரம் இல்லை
சாக்கு போக்கு சொல்லாதே புள்ள
பொள்ளாச்சி சந்தையிலே . . . ஏ . . . ஏ . . . புள்ள
பொறி வாங்க போற புள்ள
பொறுத்திரு கொஞ்ச நேரம் நானும் வாரேன்
உனக்கொரு நல்ல சேதி சொல்லப் போறேன்
மலபோலத் துன்பத்தையும் . . . ஏ . ஏ .
பனிபோல் மாற்றுகின்ற
மன்னவர் இயேசு வத்தான் ஏலேலங்குயிலே
மனசார ஏத்துக்க நீ பொன்னான மயிலே
காலமினி செல்லாதடி ஏலேலங்குயிலே
கர்த்தர் வர்ர நேரமாச்சி பொன்னான மயிலே
உலகம் முழுவதையும் . . . ஏ . . ஏ . .
ஆதாயமாக்கினாலும் உன் ஜீவனைத்தான்
நீயும் ஏலேலங்குயிலே
நஷ்டப் படுத்தினாலே பொன்னான மயிலே
லாபம் ஒன்றும் இல்லையடி ஏலேலங்குயிலே
வாழ்வதிலே அர்த்தமில்லே பொன்னான மயிலே
மாமா உன் பாட்டக்கேட்டன் இயேசுவ நா ஏத்துக்கிட்டேன்
இனிமே நா அவரத்தானே நம்பிடப் போறேன்
குல தெய்வமாக அவரக் கும்பிடப்போறேன் மாமோய்
ஓஹோ . . அப்படியா . ஏ . ஏ . ஏ . .