துதிப் பாடல்கள்

அழகுக்கே அழகான அழகு இயேசுவை

Azhagukke Azhagaana Azhagu Yesuvai

அழகுக்கே அழகான அழகு இயேசுவை

அழகாக நான் பாட வந்தேன்

அன்பே உருவான அன்பு இயேசுவை

ஆயுலெள்ளாம் நான் பாட வந்தேன்-2

அழகே அழகே அழகே அழகே-2

புறாவின் கண்களை உடையவரை

நான் புனிதமாக பாட வந்தேன்-2

மாதுளம் கன்னத்தை உடையவரை

என் மனதார நான் பாட வந்தேன்-2

வெண்மையும் சிவப்பும் ஆணவரை

நான் மென்மையாகவே பாட வந்தேன்-2

பதினாயிரம் பேரில் சிறந்தவரை

பாசமாக நான் பாட வந்தேன்-2

அல்பாவும் ஓமெகாவும் ஆணவரை

அன்பாக நான்பாட வந்தேன்-2

ஏழு குத்துவிளக்கு மத்தியில் இருப்பவரை

எளிமையாக நான் பாட வந்தேன்-2

சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பவரை

சிறப்பாக நான் பாட வந்தேன்-2

மேகங்கலுடனே வரப் போகிறவரை

மேன்மையாக நான் பாட வந்தேன்-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு