அழைக்கிறார் இயேசு உன்னை
பாவி நீ மனந்திரும்பு.! - 2
பரலோகம் உன் அருகில்
சீக்கிரமாய் மனந்திரும்பு -(2)
1. உன் சுய இச்சையினால்
பாவத்திலே சிக்கினாயோ -2
சமாதானம் இன்றி தவிக்கின்றாயோ
தயவாய் உன்னை அழைக்கிறாரே - ( 2) -அழைக்கிறார் இயேசு
2. உலகத்தின் சிற்றின்பத்தால்
சீரழிந்து போகின்றாயோ -(2)
உதவிடுவாரின்றி ஏங்குகின்றாயோ
நேசமாய் உன்னை அழைக்கிறாரே -( 2 ) -அழைக்கிறார் இயேசு
3. கடன் தொல்லை நெருக்கத்தினால்
கதறி நீயும் அழுகின்றாயோ -(2)
விடுவிப்பாரின்றி விம்முகின்றாயோ
கிருபையாய் உன்னை அழைக்கின்றாரே -(2)
-அழைக்கிறார் இயேசு