அழைத்த தேவன் உண்மையுள்ளவர்-என்னை
அணைத்த இயேசுவை ஆராதனை செய்வேன் - 2
ஆராதனை செய்வேன் - 2
அழைத்த இயேசுவையே
நான் ஆராதனை செய்வேன்
எனது வாழ்வில் பெலவீன நேரத்தில் நீரே பெலனானீர்
இல்லை என்று சொன்னபோது இருப்பேன் என்றீரே - 2
தாயானவல் கூட பாலகனை மறந்து விடுவாலே
நீர் பெயர் சொல்லி அழைத்து
உள்ளங்கையிலே வரைந்துக் கொண்டீரே - 2
எனக்கு விரோதமாய் ஆயுதங்கள் வாய்க்காதே போகும்
எதிராய் வருகின்ற ஈட்டி இரதங்களை
முறித்து எரிகின்றீர்- 2
என் பாதங்கள் கல்லிலே மோதாமல் காக்கிறவர்
என்னை வழி நடத்துவீர் வல்ல கரத்தாலே
வாழ வைத்தவர் நீர் - 2
என் காலமெல்லாம் நேரமெல்லாம்
உம் கரத்தில் கொடுப்பேன் ஒரு நன்மையும் குறைவுப்படாது
என் உயிருள்ள நாட்களெல்லாம் – 2