துதிப் பாடல்கள்

தேவ சத்தம் கேட்கும் வரைக்கும்

Deva Satham Ketkum Varaikkum

தேவ சத்தம் கேட்கும் வரைக்கும் நான் காத்திருக்கிறேன்

தேவ உத்தரவு வரும் வரைக்கும் எதிர் பார்த்திருக்கிறேன்

என் சுயமாய் ஒன்றும் செய்யத்தெரியாது

எனக்கெந்த ஞானமும் கிடையாது-2

பரத்திலிருந்து வரும் வரத்துக்காகவும்

தேவ கரத்திலிருந்து வரும் சுகத்துக்காகவும்

காத்திருக்கிறேன் எதிர் பார்த்திருக்கிறேன்

இடைவிடாமல் ஜெபிக்கும் புது பெலத்தை தாரும் ஐயா

இரவில் விழித்து துதிக்கும் துதி ஆடை வேண்டுமய்யா-2

கனவில் கூட வந்து அருகில் நின்று கொண்டு

சொப்பனம் தர வேண்டுமே

சொப்பனம் தாரும் ஐயா-தேவ சொப்பனம் தாரும் ஐயா

என் சித்தம் நிறைவேற முடியாது

எனக்கெந்த தகுதியும் கிடையாது-2

வெறுமையான என்னை நிரப்பி நடத்தவும்

உமது யோசனையைக் கேட்டு நடக்கவும்;

காத்திருக்கிறேன் எதிர் பார்த்திருக்கிறேன்

உருகி உணர்ந்து ஜெபிக்கும் நல்ல

உணர்வைத் தாருமைய்யா

அருகில் நெருங்கிப் பழகும் பரிசுத்தம் வேண்டுமய்யா-2

பரிந்து பேசுகின்ற பரத்தை தொடுகின்ற

ஜெபத்தை தரவேண்டுமே

ஆவி ஊற்றுமைய்யா ஜெப ஆவி ஊற்றுமைய்யா

இந்தக் களிமண் உடலில் ஒன்றும் கிடையாது

உம் ஆவி ஊற்றப்பட்டால் உடையாது-2

கருத்தாய் ஜெபிக்கின்ற வார்த்தைக்காகவும்

பரிசுத்தாவியின் பெலத்திற்காகவும்

காத்திருக்கிறேன் எதிர் பார்த்திருக்கிறேன்

தேவ சத்தம் கேட்கும் வரைக்கும் நான் காத்திருக்கிறேன்

தேவ உத்தரவு வரும் வரைக்கும் எதிர் பார்த்திருக்கிறேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு